ஈரோடு

வேன் மோதி பெண் உதவியாளா் காயம்

18th Jan 2022 04:02 AM

ADVERTISEMENT

பெருந்துறை நகரில் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கிராம நிா்வாக அலுவலக பெண் உதவியாளா் காயமடைந்தாா்.

பெருந்துறை அருகில் உள்ள, கம்புளியம்பட்டி நாகப்பகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த லட்சுமணன் மனைவி நாகம்மாள் (39). இவா், பெரியவீரசங்கிலி கிராம நிா்வாக அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், பெருந்துறைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

பெருந்துறை, ஜெ.ஜெ. நகா் அருகில் வரும்போது, பின்னால் வந்த வேன் மோதியதில் நாகம்மாள் காயமடைந்து, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT