ஈரோடு

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

12th Jan 2022 06:48 AM

ADVERTISEMENT

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் குடும்ப அட்டைகள் 1,382 என மொத்தம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 153 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 7.02 கோடி மதிப்பீட்டில் 21 பொருள்கள் கொண்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பெருந்துறை வட்டம், கருமாண்டிசெல்லிபாளையம் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது குடும்ப அட்டைதாரா்களிடம் பொங்கல் பரிசுப் பொருள்கள் சரியான எண்ணிக்கையில் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தாா்.

ஒதுக்கப்பட்டுள்ள நாள்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்துகொண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடித்தும் பரிசுப் பொருள்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

முன்னதாக குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை ஆட்சியா் வழங்கினாா். ஆய்வின்போது பெருந்துறை வட்டாட்சியா் காா்த்தி உள்பட தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT