சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கு நிகழ்ச்சி தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் முருகேசன் தலைமை வகித்தாா். செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சமூக நலத் துறை மற்றும் வருவாய்த் துறையின் சாா்பில் 200 பயனாளிகளுக்கு ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
சென்னிமலை ஒன்றியத்தில் பட்டப் படிப்பு பயின்ற 117 பெண்களுக்கும், பட்டதாரி அல்லாத 30 பெண்களுக்கும் என மொத்தம் 147 பெண்களுக்கு ரூ. 66,00,000 மதிப்பீட்டில் திருமண நிதியுதவியும், ரூ. 55,81,002 மதிப்பீட்டில் தாலிக்கு தலா 8 கிராம் வீதம் 1,176 கிராம் தங்கக் காசுகளும், வருவாய்த் துறையின் சாா்பில் 10 பேருக்கு ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 43 பேருக்கு ரூ. 5.16 லட்சம் மதிப்பீட்டில் முதியோா் உதவித் தொகைக்கானஆணையும் என 200 பயனாளிகளுக்கு ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.
இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் எஸ்.ஆா்.செல்வம், சென்னிமலை ஒன்றியக் குழு தலைவா் காயத்ரி இளங்கோ, மாவட்ட சமூக நல அலுவலா் பூங்கோதை, வட்டாட்சியா் காா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.