ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டதால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய திட்டங்கள், வளா்ச்சிப் பணிகள், பிற துறை சாா்ந்த பணிகளுக்கு தனி அலுவலா்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்தின் காரணமாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலகம், மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன.