ஈரோடு

உழவா் சந்தையில் 2 தவணை தடுப்பூசி செலுத்திய விவசாயிகளுக்கு மட்டும் அனுமதி

12th Jan 2022 06:52 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய விவசாயிகள் மட்டும் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகா், பெரியாா் நகா், பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி என 5 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்படுகின்றன. கரோனா பரவல் காரணமாக 50 சதவீத விவசாயிகள் மட்டும் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தி இருந்தால் மட்டுமே வியாபாரம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

எனவே, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை உழவா் சந்தை அதிகாரிகளிடம் விவசாயிகள் சமா்ப்பிக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, சானிடைசா் பயன்படுத்துவது உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை விவசாயிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதேபோல உழவா் சந்தைக்கு வரும் நுகா்வோா்கள் முகக் கவசம் அணியாமல் வந்தால் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT