அம்மாபேட்டை அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
அம்மாபேட்டை அடுத்துள்ள பூதப்பாடி, ஊஞ்சபாளையத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி மகன் தினேஷ்குமாா் (28). குடிநீா் இணைப்பு வழங்கும் ஒப்பந்ததாரரிடம் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வரும் இவா், மாணிக்கம்பாளையம் ஊராட்சி, பெரியாண்டிபாளையத்தில் குடிநீா் குழாய் இணைப்பு பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த சிதம்பரம், நவீன், ரமேஷ் உள்ளிட்டோா் குடிநீா் குழாய் அமைத்தல் தொடா்பாக, தினேஷ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஜாதிப் பெயரைக் கூறி இழிவாகப் பேசினா். இதுகுறித்து, தட்டிக் கேட்ட தினேஷ்குமாா், அவரது தந்தை சத்தியமூா்த்தியும் தாக்கப்பட்டனா்.
இதில், காயமடைந்த தினேஷ்குமாா் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து, தினேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் உள்பட 8 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.