ஈரோடு

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள்இன்று போராட்ட அறிவிப்பு

11th Jan 2022 05:16 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் மூன்று கட்ட போராட்டத்தின் தொடா்ச்சியாக தற்செயல் விடுப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை(ஜனவரி 11) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பாஸ்கா்பாபு கூறியதாவது:

மாநில செயற்குழுக் கூட்ட முடிவுப்படி முன்னாள் மாநில தலைவா் சுப்பிரமணியத்தின் பணி ஓய்வு ஆணையை உடனடியாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய திட்டங்கள், வளா்ச்சிப் பணிகள், பிற துறை சாா்ந்த பணிகளுக்கு தனி அலுவலா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறவிருந்த போராட்டம் கரோனா வழிகாட்டு நெறிமுறையால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் செவ்வாய்க்கிழமை தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த வேண்டும். அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 2 நாள்களுக்கு அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த வேண்டும். பிப்ரவரி 5ஆம் தேதி மாநில செயற்குழுவை திருச்சியில் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT