ஈரோடு

இருசக்கர வாகனத்தின் மீதுடிப்பா் லாரி மோதல்: இளைஞா் பலி

22nd Feb 2022 12:49 AM

ADVERTISEMENT

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், கள்ளியம்புதூா், முத்து நகரைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் தேவேந்திரன் (34). இவா், பெருந்துறை, சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை பிற்பகலில் இருசக்கர வாகனத்தில் விஜயமங்கலம் நோக்கிச் சென்றாா். அப்போது, பின்னால் வந்த டிப்பா் லாரி ஒன்று மோதியது. இதில், பலத்த காயமடைந்த தேவேந்திரனை பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவா், தேவேந்திரன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT