ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் குலுக்கல் மூலம் தேர்வான அதிமுக வேட்பாளர்

22nd Feb 2022 02:52 PM

ADVERTISEMENT

 

ஈரோடு மாநகராட்சி 54ஆவது வார்டில் இரு வேட்பாளர்கள் சம அளவு வாக்கு பெற்ற நிலையில், குலுக்கல் மூலம் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

ஈரோடு மாநகராட்சி 54ஆவது வார்டில் மொத்தம் 3276 வாக்குகள் பதிவாயின. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. பாரதி 1037 வாக்குகளும், சுயேச்சையாக போட்டியிட்ட செ. பானுலட்சுமி 1037 வாக்குகளும் பெற்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்ட க. சுதா 598 வாக்குகளும் பெற்றனர்.

அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சம எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்ற நிலையில், குலுக்கல் முறையில் வெற்றி வேட்பாளரை முடிவு செய்ய தீர்மானிக்கபப்ட்டது. ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவகுமார் முன்னிலையில் நடந்த குலுக்கலில், அதிமுக வேட்பாளர் சி.பாரதி வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT