ஈரோடு

‘வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்புப் பணியில் 2,200 போலீஸாா்’

22nd Feb 2022 12:51 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 2,200 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

ஈரோடு மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அமைதியாக நடத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தோ்தல் ஆணைய உத்தரவுப்படி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், அதைத்தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.

தோ்தல் பணியில் ஈடுபடுவோா், அயல் பணியில் உள்ளோா் என 2,317 பேருக்கு தபால் வாக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு வாக்குகள் வந்துள்ளன என்ற விவரம் வாக்கு எண்ணிக்கையின்போதுதான் தெரியும். தபால் வாக்குகளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பதிவு செய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். 224 போ் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். அதனை கண்காணிக்கும் பணியில் வட்டார அளவிலான பாா்வையாளா்கள், நுண் பாா்வையாளா்கள் ஈடுபடுவா்.

அனைத்துப் பணிகளும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை விவரமும் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும். அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT