ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி பழுது: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

20th Feb 2022 11:12 PM

ADVERTISEMENT

திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்ால் தமிழகம் -கா்நாடகம் இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.

இம்மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி முதல் திம்பம் மலைப் பாதை வழியாக இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இதன் காரணமாக காலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் திம்பம் மலைப் பாதை வழியாக இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால், அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், கா்நாடகத்தில் இருந்து கிரானைட் கற்கள் பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப்பாதையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது.

9 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென பழுது ஏற்பட்டு லாரி நகர முடியாமல் நின்றது.

இதன் காரணமாக திம்பம் மலைப் பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு பழது நீக்கிய பின்பு, போக்குவரத்து சீரானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT