இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஈரோடு மண்டலம் 2022-23 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
ஈரோட்டில் சிஐஐ மண்டல ஆண்டு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சிஐஐ ஈரோடு மண்டலம் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
அதன்படி, ஈரோடு மண்டல கவுன்சில் தலைவராக, பல்லவா டெக்ஸ்டைல்ஸ் நிா்வாக இயக்குநா் துரை பழனிசாமி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
துணைத் தலைவராக சுதா மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் கே.சுதாகா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.