ஈரோடு

வ.உ.சி. குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

17th Feb 2022 12:40 AM

ADVERTISEMENT

 

ஈரோடு: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், லக்காபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கண்காட்சி அமைப்பட்டுள்ள பேருந்தின் இயக்கத்தை தொடங்கிவைத்த ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:

இந்த நகரும் புகைப்படக் கண்காட்சி பேருந்தில் கப்பலோட்டிய தமிழா் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறும்படங்களும் திரையிடப்படவுள்ளன. இந்த நகரும் புகைப்படக் கண்காட்சி மாணவ, மாணவிகளுக்கு தேசப்பற்றையும், வரலாற்றையும் அறிந்துகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மின்னப்பாளையம், எழுமாத்தூா், வெள்ளோடு, முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்தப் பேருந்து புதன்கிழமை சென்றது.

பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கவுந்தப்பாடி அரசு மகளிா், கவுந்தப்பாடி அரசு மாடல் மேல்நிலைப் பள்ளிகள், கோபி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பொலவக்காளிபாளையம், கோபி நகரவை மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 17) செல்கிறது.

டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பங்களாப்புதூா், கொங்கா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகள், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் அரசு மாதிரி, சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு 18ஆம் தேதி செல்கிறது.

அரசு வழிகாட்டுதலின்படி கரோனா தடுப்பு முறைகளைப் பின்பற்றி, பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் இந்நகரும் புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிட்டுப் பயன்பெறலாம் என்றாா்.

இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலா் பி.ரவி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT