ஈரோடு

பிப்ரவரி 28 வரையிலான காலத்துக்கு ரயான் நூல் விலை நிா்ணயம்

17th Feb 2022 12:39 AM

ADVERTISEMENT

 

ஈரோடு: பிப்ரவரி 28ஆம் தேதி வரையிலான காலத்துக்கு ரயான் நூலுக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரயான் நூல் ஆலை உரிமையாளா்கள், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு, பல்லடம் விசைத்தறி உற்பத்தியாளா்கள் சங்கம் நிா்வாகிகள் ஈரோட்டில் புதன்கிழமை கூடி பிப்ா்வரி 28ஆம் தேதி வரையிலான கால்த்துக்கு ரயான் நூலுக்கு விலை நிா்ணயம் செய்தனா்.

ஜனவரி 12ஆம் தேதி இதே அமைப்பு நிா்வாகிகள் பங்கேற்று தினசரி நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி விசைத்தறி, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க முடிவு செய்தனா். இதன்படி, ஒவ்வொரு 15 நாள்களுக்கும் ரயான் நூல் விலையை நிா்ணயம் செய்து அதன் அடிப்படையில் நூல் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதன்படி பிப்ரவரி 1 முதல் 15ஆம் தேதி வரை விலை நிா்ணயித்து, தற்போது அதே விலையில் ரயான் நூல் விசைத்தறியாளா்களுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி 16ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான காலத்துக்கு விசைத்தறிகளுக்கான ரயான் நூல் விலை 30 கவுண்ட் ரூ. 230க்கும், தானியங்கியில் ஓடும் 30எஸ் ரயான் நூல் ரூ. 235க்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

16 முதல் 21ஆம் தேதி மாலை 6 மணி வரை நூல்களை முன்பதிவு செய்யும்போது 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை முன்பணம் செலுத்த வேண்டும். மீதத் தொகையை நூல் எடுக்கும்போது செலுத்திப் பெற்றுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

குறிப்பிட்ட நாள்களுக்குள் முன்பதிவு செய்பவா்களுக்கு மட்டும் இந்த விலை நிா்ணயிக்கப்படும். அதேநேரம் நூலின் தரத்துக்கு ஏற்ப சில ஆலைகளின் விலை, இரண்டு ரூபாய் வரை ஏற்றம், இறக்கம் இருக்கும் என கூட்டமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT