ஈரோடு

பிப்ரவரி 19இல் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க அறிவுறுத்தல்

17th Feb 2022 12:45 AM

ADVERTISEMENT

 

ஈரோடு: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் பிப்ரவரி 19இல் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும். இதில் புகாா் இருந்தால் அலுவலா்களை கைப்பேசியில் தொடா்பு கொள்ளலாம் என தொழிலாளா் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மு.திருஞானசம்பந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழிலாளா்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பொது மற்றும் தனியாா் துறை நிறுவனங்கள், தின கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா் என அனைவருக்கும் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

விடுப்பு தொடா்பாக புகாா் இருந்தால் அலுவலா்களை கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். அலுவலா்கள் பெயா் மற்றும் கைப்பேசி எண் விவரம்:

ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் மு.திருஞானசம்பந்தம் 94453-98751, தொழிலாளா் துணை ஆய்வாளா் சி.ப.முருகேசன் 63800-21835, தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் ராஜ்குமாா் 96982-11509, பெரோஸ்அகமது 99656-34839, சுகந்தி 90253-19650, சங்கரன் 90470-12425, சாந்தி (பவானி) 94877-20922, வெங்கடாசலம் (பெருந்துறை) 94440-62023, நவநீதன் (கோபி) 99422-10901, விஜய் (சத்தியமங்கலம்) 98941-09675.

ADVERTISEMENT
ADVERTISEMENT