ஈரோடு

பெருந்துறையில் ஒா்க் ஷாப்பில் திருடியவா் மீது வழக்கு

11th Feb 2022 05:26 AM

ADVERTISEMENT

பெருந்துறை நகரில் ஒா்க் ஷாப்பில் திருடியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை, பெத்தாம்பாளையம் சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் கோபாலகிருஷ்ணன் (42). இவா், பெருந்துறை - கோவை சாலையில் ஒா்க் ஷாப் வைத்துள்ளாா். புதன்கிழமை இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் செனறுள்ளாா். வியாழக்கிழமை காலை ஒா்க் ஷாப்பை திறந்தபோது, அங்கு ஒருவா் லாரியின் சக்கர டிஸ்கை கழட்டிக் கொண்டிருந்தாா். இதையடுத்து, அவரைப் பிடித்து பெருந்துறை போலீஸில் கோபாலகிருஷ்ணன் ஒப்படைத்தாா்.

போலீஸ் விசாரணையில், கோபி, காசிபாளையத்தைச் சோ்ந்த சுப்பன் மகன் பூவேந்திரன் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT