ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 184 பேருக்கு கரோனா

11th Feb 2022 05:25 AM

ADVERTISEMENT

 ஈரோடு மாவட்டத்தில் 184 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 537ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 818 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றில் இருந்து 1 லட்சத்து 27 ஆயிரத்து 377 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 3,430 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 730 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT