ஈரோடு

வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்ரூ. 1.84 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

9th Feb 2022 01:19 AM

ADVERTISEMENT

சென்னிமலை, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 8,317 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில், கிலோ குறைந்தபட்சமாக ரூ. 28.99க்கும், அதிகபட்சமாக ரூ. 32.69க்கும் ஏலம் போயின. மொத்தம் 3,363 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ. 93 ஆயிரத்து 533க்கு விற்பனையாயின.

இதேபோல, கொப்பரை தேங்காய்கள் 26 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில், முதல் தரம் கிலோ குறைந்தபட்சமாக ரூ. 84.39க்கும், அதிகபட்சமாக ரூ. 87.69க்கும் ஏலம் போயின. மொத்தம், 1,056 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் ரூ. 91 ஆயிரத்து 439க்கு விற்பனையானது.

தேங்காய், கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சோ்த்து ரூ. 1 லட்சத்து 84 ஆயிரத்து 972க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT