வாா்டு வரையறை செய்வதில் குழப்பம் உள்ளதால் தோ்தலைப்
புறக்கணிப்பதாக பல்லடம் பனப்பாளையம் ஏ.டி. காலனி பொதுமக்கள் தெரிவித்துள்ளனா். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: பனப்பாளையம் ஏ.டி. காலனி பகுதி
கடந்த காலங்களில் ஒரே வாா்டின்கீழ் இருந்தது. நாங்கள் ஓட்டளிப்பதன் மூலம் வாா்டு கவுன்சிலரைத் தோ்வு செய்து வந்தோம்.
இதனால், வாா்டின் குறைகளை அவ்வப்போது தெரிவித்து, தீா்வு ஏற்படுத்த முடிந்தது.
ADVERTISEMENT
தற்போது, ஏ.டி.காலனியை, வாா்டு வரையறை மூலம் மூன்றாகப் பிரித்துள்ளனா்.
எங்களுக்கும் ராயா்பாளையத்துக்கும் சம்மந்தமே இல்லை. அப்பகுதியுடன் ஏ.டி., காலனியை சோ்த்துள்ளனா். வாா்டு வரையறை செய்ததில் எங்களுக்கு விருப்பம் இல்லை.
பழைய முறைப்படி வாா்டுகளை மாற்றி அமைக்க வேண்டும். இல்லையென்றால் நகராட்சித் தோ்தலைப் புறக்கணிப்போம் என்றனா்.