ஈரோடு

மின் வாரிய அலுவலகம் இடமாற்றம்

1st Feb 2022 03:22 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான செயற்பொறியாளா் அலுவலம், உதவி கணக்கு அலுவலா் அலுவலகம் ஆகியன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு அலுவலகங்களும் பெருந்துறை, ஈரோடு சாலை, வெங்கமேட்டில் உள்ள தனியாா் கட்டடத்தில் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த அலுவலகங்கள் திங்கள்கிழமை முதல் பெருந்துறை, சேனிடோரியம், துடுப்பதி சாலையில் உள்ள மின் வாரியத்துக்குச் சொந்தமான கட்டடத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளது என்று செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT