திருப்பூா் மாநகரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட
ரூ.6.31 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பழவஞ்சிபாளையம் பகுதியில் ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.சாந்தி தலைமையிலான தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி நடத்திய சோதனையில், அதில் ரூ.6.31 லட்சம் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்வது தெரியவந்தது.
ADVERTISEMENT
இதையடுத்து, ரூ.6.31 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரை ஓட்டிவந்த ரவிசந்திரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.