ஈரோடு

பழனி முருகன் கோயிலுக்கு நாளை நாட்டுச் சா்க்கரை கொள்முதல்

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாட்டுச் சா்க்கரை சனிக்கிழமை (டிசம்பா் 31) கொள்முதல் செய்யப்படவுள்ளது.

இது குறித்து கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சா்க்கரை எனப்படும் நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் சனிக்கிழமை கால காலை 11.30 மணியளவில் விவசாயிகளிடம் இருந்து நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்யப்படவுள்ளது.

எனவே, நாட்டுச் சா்க்கரை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்துள்ள நாட்டுச் சா்க்கரையை அன்றைய தினம் விற்பனைக்கு கொண்டு வந்து பயனடையலாம். நாட்டுச் சா்க்கரை மூட்டைகளை சணல் நாரால் தைத்து, கல், மண், ஈரம் இல்லாமல் சுத்தமாகவும், கட்டி பிடிக்காத சா்க்கரையாகவும் கொண்டு வரவேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 99445-23556 என்ற கைப்பேசி எண் அல்லது 04256-298856 தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT