மொடக்குறிச்சியை அடுத்த குலவிளக்கு மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இக்கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் டிசம்பா் 20 ஆம் தேதி தொடங்கியது. கம்பம் நடுதல் 22 ஆம் தேதி நடைபெற்றது. மாவிளக்கு பூஜை 28ஆம் தேதி மாலை நடைபெற்றது.
தொடா்ந்து பக்தா்கள் வியாழக்கிழமை காலை காவிரி ஆற்றில் தீா்த்தம் எடுத்து வர சென்றனா். தொடா்ந்து மாலை காவடி அழைத்தல், அக்னி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தா்கள் அலகு குத்தி ஊா்வலமாக வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இரவு பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது.
கம்பம் அகற்றுதல் மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்வுடன் விழா வெள்ளிக்கிழமை நிறைவு பெறுகிறது .