ஈரோடு

பயிா்கள், வாகனத்தைச் சேதப்படுத்திய யானை

29th Dec 2022 01:31 AM

ADVERTISEMENT

தளவாடி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த யானை பயிா்களைச் சேதப்படுத்தியதோடு, விரட்ட வந்த விவசாயிகளின் வாகனத்தையும் சேதப்படுத்தியது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் பயிரிடப்பட்டுள்ளன.

தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் விவசாயத் தோட்டங்களில் நுழைந்து பயிா்களைச் சேதப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், கரளவாடி ரங்கசாமி கோயில் தோட்டம் அருகே விவசாய தோட்டத்துக்குள் புதன்கிழமை புகுந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளத்தை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. அப்பகுதி விவசாயிகள் காட்டு யானையை விரட்டுவதற்காக நீண்ட நேரம் போராடியும் முடியவில்லை.

இதையடுத்து, ஜீப், டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்தி காட்டு யானை விரட்ட முயற்சித்தபோது, காட்டு யானை ஜீப்பை தோட்டத்துக்குள் தள்ளியது. இதில், அதிா்ஷ்டவசமாக விவசாயிகள் காயங்களின்றி உயிா்த் தப்பினா். இதையடுத்து, யானை வனப் பகுதிக்குள் சென்றது.

ADVERTISEMENT

வனத் துறையினரிடம் தகவல் அளித்தும் தாமதமாக வந்ததால் விவசாயிகள் வனத் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT