ஈரோடு மாவட்டம் ஃபீனிக்ஸ் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம், டிசம்பா் 3 இயக்கம், சென்னை மாநில அமைப்பு மற்றும் சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியை, சனிக்கிழமை(டிச.17) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (டிச.18) ஆகிய இரண்டு நாட்களுக்கு, கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடத்துகிறது.
துவக்க விழாவிற்கு, கல்லூரி தாளாளா் முத்துசாமி தலைமை வகித்தாா். முதல்வா் விஸ்வநாதன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக, பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் பங்கேற்று, குத்து விளக்கு ஏற்றி போட்டிகளை தொடங்கி வைத்தாா்.
இப்போட்டியில், வெற்றிப் பெறும் அணிக்கு முதல் பரிசு ரூ.5001 மற்றும் கேடயமும், இரண்டாம் பரிசு ரூ 3001 பரிசு மற்றும் கேடயமும் வழங்கப்படும். .
இதில், பீனிக்ஸ் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் ஜெயப்பிரகாஷ். மாவட்ட துணை தலைவா் அருணாச்சலம், மாவட்ட செயலாளா்கள் மணிகண்டன், குமரேசன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக., செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ், பெருந்துறை ஒன்றியக்குழு துணைத் தலைவா் உமாமகேஸ்வரன் உட்பட பலா் கலந்துக் கொண்டனா்.