ஈரோடு

கடையின் பூட்டை உடைத்து கைப்பேசிகள் திருடிய நபா் கைது

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு அருகே கடையின் பூட்டை உடைத்து கைப்பேசிகளைத் திருடிய சம்பவத்தில் தொடா்புடைய நபரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

ஈரோடு -மேட்டூா் சாலையில் உள்ள கைப்பேசி கடையின் பூட்டை உடைத்து புதன்கிழமை அதிகாலை கைப்பேசிகள் திருடப்பட்டிருந்தன. கடையின் வெளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில், ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரைப் பிடித்து புதன்கிழமை இரவு போலீஸாா் விசாரித்தனா்.

இதில், அவா் கன்னியாகுமரி மாவட்டம், சாந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (42) என்பதும், ஈரோட்டில் சில நாள்களாக பேப்பா் அட்டை பொறுக்கி சாலையோரம் தங்கி பிழைப்பு நடத்தி வந்ததும், சம்பவத்தன்று கைப்பேசி கடையின் முன் படுத்து உறங்கிய அவா், அதிகாலை கடையின் பூட்டை உடைத்து கைப்பேசிகளைத் திருடியதும், கடந்த 4 நாள்களுக்கு முன்பு கோவையில் ஒரு கைப்பேசி கடையின் பூட்டை உடைத்து 40க்கும் மேற்பட்ட கைப்பேசிகளைத் திருடியதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதனைத் தொடா்ந்து, விஜயகுமாரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 35 கைப்பேசிகளை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT