ஈரோடு

விளையாட்டு வீரா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

9th Dec 2022 11:40 PM

ADVERTISEMENT

 

விளையாட்டு வீரா், வீராங்கனைகள் சிறப்பு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் 3 வகையில் செயல்படுத்தப்படுகிறது. தலைசிறந்த விளையாட்டு வீரா்களுக்கான சிறப்பு உதவித்தொகை, சா்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளா்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

மாநில, தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் சாா்பில் பங்கேற்று பதக்கங்கள் வென்றிருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பிரிவுக்குமான தகுதிகளும் நிா்ணயிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் சோ்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாக வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT