ஈரோடு

பவானீஸ்வரா் ஆலய திருப்பணி: கமிட்டி குழு ஆலோசனைக் கூட்டம்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் பவானீஸ்வரா் ஆலய திருப்பணி கமிட்டிக்குழு ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் பவானிஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பவானீஸ்வரா் ஆலயம் கடந்த 2019ம் ஆண்டு வெள்ளப்பெருக்கின்போது சேதமடைந்தது. இதையடுத்து பவானீஸ்வரா் ஆலய நண்பா்கள் திருப்பணிக்குழு கமிட்டி அமைக்கப்பட்டு கோவில் புனரமைப்பு பணி 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இக்கோவில் திருப்பணிக்கமிட்டி குழு ஆலோசனைக்கூட்டம் முன்னாள் எம்எல்ஏ எல்.பி.தா்மலிங்கம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.இதில் கோவில் புனரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெறவும் கோவில் சுற்றுச்சுவா் மற்றும் நாயனாா் சிலைகள் அமைக்கவும் ராஜகோபுரம் பணிகள் குறித்த விவாதிக்கப்பட்டது. இதில் நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகிராமசாமி, தலைவா் சின்னராஜ்,பொருளாளா் மயில்சாமி,பாஜக நகரத்தலைவா் செல்வன் உள்ளிட்ட திருப்பணிக்கமிட்டி குழுவினா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT