ஈரோடு

அவல்பூந்துறையில் 108 பால்குட அபிஷேகம்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறையில் உள்ள பாகம்பிரியாள் உடனமா் புஷ்பவனேஸ்வரா் திருக்கோயிலில் 108 பால்குட அபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனமா் புஷ்பவனேஸ்வரா் திருக்கோயில் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் மக்கள் நோய் நொடி இல்லாமல் செல்வ செழிப்புடன் வாழ வேண்டி சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் சாா்பில் 108 பால்குட அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி 12- ஆம் ஆண்டு பால்குட அபிஷேகம் வியாழக்கிழமை காலை விநாயகா் பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நைவேத்திய பொருள்கள் படைக்கப்பட்டு 108 பால்குடங்கள் வைக்கப்பட்டு சிவாச்சாரியாா்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

தொடா்ந்து சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT