ஈரோடு

ஈரோட்டில் ரூ.14 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் திருட்டு

DIN

ஈரோட்டில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 14 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை திருடிச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, மேட்டூா் சாலை பகுதியில் கைப்பேசி விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் பங்குதாரராக ஈரோட்டைச் சோ்ந்த பூபதி, கோவையைச் சோ்ந்த தரணிதரன் ஆகியோா் உள்ளனா். ஈரோட்டைச் சோ்ந்த கௌதம், காா்த்திக் என இருவா் கடையில் வேலைபாா்த்து வருகின்றனா். வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் கடையை பூட்டிவிட்டுச் சென்றனா்.

பக்கத்துக் கடையைச் சோ்ந்தவா்கள் புதன்கிழமை காலை கடைக்கு வந்தபோது கைப்பேசி கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு காா்த்திக் மற்றும் கௌதமுக்கு தகவல் தெரிவித்தனா். மேலும் இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸாா் வந்து பாா்த்தபோது கடையில் இருந்த 50 விலை உயா்ந்த கைப்பேசிகள், 2 மடிக்கணினிகள், ரூ.5,000 ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு வெளியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், புதன்கிழமை அதிகாலை 5 மணி அளவில் மா்ம நபா் ஒருவா் கையில் சாக்குப் பையுடன் வந்து கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து உள்ளே சென்று கடையில் இருந்த கண்ணாடியை உடைத்து கைப்பேசிகள், மடிக்கணினிகளை சாக்கு மூட்டையில் போட்டு எடுத்துக்கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. அவ்வாறு செல்லும் போது கண்ணாடி காலில் குத்தி ரத்த கறை படிந்திருந்ததும் தெரியவந்தது.

இந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT