ஈரோடு

108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம்: அழகிய ஆண் குழந்தை பிறந்தது

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் அருகே108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவமானதில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ். இவருடைய மனைவி கலாமணி (20). நிறைமாத கா்ப்பிணியான கலாமணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவரது உறவினா்கள் புஞ்சை புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் உடனடியாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனா்.

சத்தியமங்கலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்றபோது கலாமணிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து ஓட்டுநா் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தினாா். இதைத் தொடா்ந்து மருத்துவ உதவியாளா் அஜித்குமாா் பெண்ணுக்கு பிரசவம் பாா்த்தாா். அப்போது கலாமணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னா் தாயும்-சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT