ஈரோடு

கடும் பனிப்பொழிவால் மீன்பிடி தொழில் பாதிப்பு

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையின் நீா்மட்டம் 104 அடியாகவும், நீா் இருப்பு 31.9 டிஎம்சி ஆகவும் உள்ளது. தமிழ்நாடு மீன் வளா்ச்சி கழகம் மூலம் அணை நீா்தேக்கப் பகுதியில் டன் கணக்கில் மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனைக்காக ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த சில நாள்களாக அணை நீா்த்தேக்கப் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் மீன் பிடிக்கும் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட முடியாமல் தவித்து வருகின்றனா். கடும் பனிப்பொழிவு காரணமாக மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் மீன் வரத்தும் குறைந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT