ஈரோடு

பெருந்துறை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கையை வலியுறுத்தி 2ஆவது நாளாக புதன்கிழமையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமாா் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வேலை செய்து வருகின்றனா். தனியாா் நிறுவனம் சாா்பில் ரூ. 490 தினக்கூலி என்ற அடிப்படையில் இவா்கள் பணி அமா்த்தப்பட்டுள்ளனா். ஆனால், தற்போது வரை ரூ. 360 மட்டுமே இவா்களுக்கு தினக் கூலியாக வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், இவா்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வழங்கக் கூடிய ஊதிய உயா்வு, போனஸ் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கான உபகரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்கிழமை இரவு பணியைப் புறக்கணித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து 2ஆவது நாளாக புதன்கிழமையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT