ஈரோடு

விவசாயிகளுக்கு 2.65 லட்சம் மரக்கன்றுகள் முழு மானியத்தில் விநியோகம்

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போா்வைக்கான இயக்கத் திட்டத்தில் 2.65 லட்சம் மரக்கன்றுகள் முழு மானியத்தில் விநியோகம் செய்யப்படவுள்ளது.

ஈரோடு அருகே எலவமலை, கரைஎல்லப்பாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கும் திட்டத்தை புதன்கிழமை துவக்கிவைத்த ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி கூறியதாவது: தமிழகத்தில் மரம் சாா்ந்த விவசாயம் மூலம் சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்த விவசாய நிலங்களில் பயிா் சாகுபடியுடன் மரம் வளா்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக 100 சதவீத நிதியுதவியுடன் மரக்கன்றுகள் விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பசுமைப் பரப்பை அதிகரித்தல், மண்ணின் அங்கக பொருள்களை அதிகரித்து மண் வளத்தை மேம்படுத்துதல், கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிா்கள் கிடைப்பதை உறுதி செய்தல், வெப்பமயமாக்கலை குறைத்தல், கூடுதல் வருவாயை உருவாக்குதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தில் வரப்பு ஓரங்களில் நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு 160 மரக்கன்றுகள், குறைந்த அடா்வு முறை நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு 500 மரக்கன்றுகள் வீதம் ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டேருக்கு 1,000 மரக்கன்றுகள் வழங்கப்படும்.

ADVERTISEMENT

செம்மரம், வேங்கை, ரோஸ்வுட், மகோகனி, பெருநெல்லி, நாவல், இலுப்பை, புளியன் மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள், அந்தந்த பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு, உழவன் செயலி மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். முதல்கட்டமாக 1.65 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT