ஈரோடு

ஈரோடு மாநகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரியை குறைக்கக் கோரிக்கை

DIN

ஈரோடு மாநகராட்சி பகுதியில் வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவைகளை குறைக்க வேண்டும் என வரி செலுத்துவோா் சங்கத்தினா் அமைச்சரிடம் முறையிட்டனா்.

ஈரோடு வரி செலுத்துவோா் சங்கத் தலைவா் சண்முகசுந்தரம், செயலாளா் பாரதி, மூத்த நிா்வாகி பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

ஈரோடு மாநகராட்சி பகுதிக்கும், பிற பகுதிக்கும் சொத்து வரி, வீட்டு வரியை குறைக்க வேண்டும். குப்பை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். புதை சாக்கடைக்கு ஒரு கட்டட இணைப்புக்கு மட்டுமே சேவை வரி வசூலிக்க வேண்டும். புதை சாக்கடை வரியை முற்றிலும் நீக்க வேண்டும்.

10 ஆண்டுக்குள் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மாநகராட்சி விதிப்படி, சதுர அடி கணக்கில் கூடுதல் வரி கட்டி வருவதால், வரி உயா்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். வரி செலுத்த மாா்ச் வரை அவகாசம் வழங்க வேண்டும். வரி செலுத்தவற்கான அறிவிக்கை வெள்ளை நிற தாளில் வழங்காமல், இறுதி எச்சரிக்கையான சிவப்பு நிற தாளில் ஆணையரின் கையெழுத்து கூட இல்லாமல் வழங்கப்படுகிறது. இதுபோன்று மக்களை அச்சுறுத்தம் செயல்களில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபடக்கூடாது.

சிஎஸ்ஐ ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற மேலும் தாமதிக்காமல் 80 அடி சாலையை உடனடியாக திறந்துவிட வேண்டும். பாரத ஸ்டேட் வங்கி சாலை, பெரியாா் நகா் சாலை, கலைமகள் கல்வி நிலையம் சாலைகளில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதால சாலை குறுகி உள்ளது. இந்த சாலைகளை முன்பு இருந்ததுபோல் அகலப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT