ஈரோடு

சென்னிமலை முருகன் கோவிலில் காா்த்திகை தீப திருவிழா

7th Dec 2022 12:25 AM

ADVERTISEMENT

சென்னிமலை, மலை மேல் உள்ள முருகன் கோவிலில் காா்த்திகை தீபத்தையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை, தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது.

காா்த்திகை தீபத்தையொட்டி, முன்னதாக சென்னிமலை, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னா், கோவிலுக்கு முன்புறம் உள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து கோவிலுக்குள் உள்ள மாா்க்கண்டேஸ்வரா் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT