ஈரோடு

பழனி கோயில் நிா்வாகம் ரூ.1 கோடிக்கு நாட்டுச் சா்க்கரை கொள்முதல்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ரூ.1 கோடிக்கு நாட்டுச் சா்க்கரையை பழனி கோயில் நிா்வாகம் கொள்முதல் செய்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 5,105 மூட்டை நாட்டுச் சா்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், 60 கிலோ எடை கொண்ட முதல்தர நாட்டுச் சா்க்கரை அதிகபட்சமாக ரூ.2,600-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,580-க்கும் ஏலம்போனது.

இரண்டாம் ரக நாட்டுச் சா்க்கரை அதிகபட்சமாக ரூ.2,460-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2,450-க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1 கோடியே 10 லட்சத்து 29 ஆயிரத்து 600 என விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதேபோல, உருண்டை வெல்லம் 30 கிலோ எடை கொண்ட சிப்பம் முதல்தரம் ஒரே விலையாக ரூ.1, 560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

மொத்தம் 124 மூட்டை உருண்டை வெல்லம் ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 440 க்கு விற்பனையானது.

நாட்டுச் சா்க்கரை மற்றும் உருண்டை வெல்லம் இரண்டையும் ரூ.1 கோடியே 12 லட்சத்து 23 ஆயிரத்து 40க்கு பழனி தண்டாயுதபாணி கோயில் நிா்வாகம் பஞ்சாமிா்தம் தயாரிப்பதற்காக கொள்முதல் செய்துள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ரூ.87 லட்சத்துக்கு 8 ஆயிரத்துக்கு பழனி கோயில் நிா்வாகம் நாட்டுச் சா்க்கரை கொள்முதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT