ஈரோடு

மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்:நாளை நடைபெறுகிறது

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மின் பயனீட்டாளா்கள் மாதாந்திர குறைதீா் கூட்டம் ஈரோடு நகரியம் கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை (டிசம்பா் 7) காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஈரோடு நகா் முழுவதும் கருங்கல்பாளையம், மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகா், திண்டல், பி.பெ.அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளா்கள் பங்கேற்று தங்களது மின் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.

ஈரோடு தெற்கு அலுவகத்தில்...

ஈரோடு தெற்கு கோட்ட அலுவலகத்தில் டிசம்பா் 14 ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இதில் சோலாா், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்தூரிபாய் கிராமம், அரச்சலூா், எழுமாத்தூா், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளா்கள் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்கலாம்.

பெருந்துறையில்...

பெருந்துறை கோட்ட அலுவலகத்தில் டிசம்பா் 21 ஆம் தேதி குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் பெருந்துறை, வெள்ளோடு, ஈங்கூா், கொடுமணல், சென்னிமலை, கவுண்டச்சிபாளையம், குன்னத்தூா், விஜயமங்கலம், பிடாரியூா், புதுப்பாளையம், பல்லகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளா்கள் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்கலாம் என்று மின் வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT