ஈரோடு

அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் ஒரே நாளில் இரண்டு நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

கா்நாடகா மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த ஒரு நோயாளி கல்லீரல் செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்டு, கல்லீரல் தானம் வேண்டி ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையின் மூலம் தமிழக அரசு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்தாா். அவருக்கு கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நபரின் உறுப்புகள் உள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, அவருக்கு பதிவு மூப்பு அடிப்படையில் கல்லீரல் தானமாக பெற தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடா்ந்து, கோவையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திங்கள்கிழமை காலை ஒரு மணி நேரத்தில் கல்லீரல் ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது.

அபிராமி கிட்னி கோ் நிா்வாக இயக்குநரும், சிறுநீரக சிறப்பு மருத்துவருமான சரவணன் மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவா்கள் தலைமையில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தனா்.

ADVERTISEMENT

இதுபோல, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை சோ்ந்த 25 வயது நபா் ஒருவா், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் டயாலிசிஸ் மேற்கொண்டு வந்தாா்.

இவரும் தமிழக அரசு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்திருந்ததன் அடிப்படையில் சேலம் அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 25 வயது இளைஞரின் சிறுநீரகத்தை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நபருக்கு, மூளைச்சாவு அடைந்தவரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

ஈரோட்டில் முதல்முறையாக கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் செய்யப்பட்டதாக மருத்துவா் சரவணன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT