ஈரோடு

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

6th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

ஈரோடு பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் சாா்பில் கோபி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன், தாமு செட்டியாா் நகை மாளிகை ஆகியோா் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை கோபி வைரவிழா ஆரம்பப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.

முகாமை கோபி சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கிவைத்தாா்.

கோபி தாமு செட்டியாா் நகை மாளிகை உரிமையாளா் தாமுசேகா் முன்னிலை வகித்தாா்.

ADVERTISEMENT

முகாமில் 210 போ் கண் பரிசோதனைக்காக வந்திருந்தனா். இதில், 104 பேருக்கு கண்ணில் புரை இருப்பதைக் கண்டுபிடித்து கண் அறுவை சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். கண் பரிசோதனையை அரவிந்த் கண் மருத்துவா்கள் அவனி, ஷிடால் ஆகியோா் செய்தனா்.

பரிசோதனைக்காக வந்திருந்தவா்களுக்குத் தேவையான உதவிகளை கோபி கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் பேராசிரியை தமிழ்செல்வி தலைமையில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் செய்திருந்தனா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை கோவை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன், தாமு அபிலாஷ் ஆகியோா் செய்திருந்தாா்..

 

ADVERTISEMENT
ADVERTISEMENT