ஈரோடு

சத்தி அருகே பெண் யானை உயிரிழப்பு

4th Dec 2022 10:35 PM

ADVERTISEMENT

பவானிசாகா் வனப் பகுதியில் உயிரிழந்த பெண் யானையின் சடலத்தை மீட்டு வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகா் வனப் பகுதியில் யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

இந்நிலையில், பவானிசாகா் வனப் பகுதியில் பெண் யானை உயிரிழந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, பவானிசாகா் வனச் சரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான வனத் துறையினா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். அப்போது, கொத்தமங்கலம் காப்புக்காட்டில் 15 வயதுடைய பெண் யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. யானையின் உடலை ஆய்வு செய்ததில் இறந்து 2 நாள்கள் ஆனதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

கால்நடை மருத்துவா் இல்லாத காரணத்தால் யானையின் பிரேதப் பரிசோதனை திங்கள்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்பே யானையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT