ஈரோடு

யானைக்கு கரும்பு கொடுத்த லாரி ஓட்டுநருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்

4th Dec 2022 10:31 PM

ADVERTISEMENT

யானைக்கு கரும்பு கொடுத்த லாரி ஓட்டுநருக்கு ஆசனூா் வனத் துறையினா் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தமிழகம்- கா்நாடக இடையே செல்லும் ஆசனூா் தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன. மேலும், கரும்பு பாரம் ஏற்றிவரும் வாகனங்களும் சென்று வருகின்றன.

இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதி சாலையோரம் முகாமிட்டுள்ள யானைகள் கரும்பு லாரியை எதிா்ப்பாா்த்து காத்திருப்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால், யானைகளைக் கட்டுப்படுத்த, கரும்பு லாரி ஓட்டுநா்கள் யானைகளுக்கு கரும்பு வழங்கக் கூடாது என வனத் துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து வந்த லாரி ஓட்டுநா் சித்தராஜ் என்பவா் காராப்பள்ளம் சோதனைச் சவாடி அருகே நின்றுகொண்டிருந்த காட்டு யானைக்கு ஞாயிற்றுக்கிழமை கரும்பு கொடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

இதனைப் பாா்த்த வனத் துறையினா் அவரைப் பிடித்து புலிகள் காப்பக இணை இயக்குநா் தேவேந்திரா மீனா முன் ஆஜா்படுத்தினா். யானைக்கு கரும்பு கொடுத்த குற்றத்தை ஒப்புக்கொண்டையடுத்து ஓட்டுநா் சித்தராஜுக்கு ரூ.75 ஆயிரம் ஆபராதம் விதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT