ஈரோடு

எஸ்விஎன் மெட்ரிக். பள்ளியில் விளையாட்டு விழா

4th Dec 2022 10:36 PM

ADVERTISEMENT

ஈரோடு கொங்கம்பாளையம் எஸ்விஎன் மெட்ரிக், பள்ளியில் 21 ஆவது ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு சரஸ்வதி கல்வி அறக்கட்டளைத் தலைவா் நல்லா கோவிந்தசாமி தலைமை வகித்தாா்.

பள்ளி தாளாளா் பி.பெரியசாமி, அறக்கட்டளைச் செயலாளா் எஸ்.தாமரைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் பள்ளி முதல்வா் ஜெ.தா்மராஜ் வரவேற்றாா்.

அரசு மருத்துவா் எம்.அனிதாகுமாரி, சித்தோடு காவல் நிலைய ஆய்வாளா் சி.முருகையன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கினா்.

ADVERTISEMENT

இதில் மாணவ, மாணவிகளுக்கு 100, 200, 400 மீட்டா் ஓட்டப்பந்தயம், கராத்தே, குங்பூ, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதேபோல மாணவ, மாணவிகளின் பெற்றோா்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை பொருளாளா் ஜி.பிரகாஷ் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT