ஈரோடு

அகவிலைப்படி உயா்வு வழங்க அரசு ஊழியா்கள் கோரிக்கை

4th Dec 2022 10:36 PM

ADVERTISEMENT

மத்திய அரசு ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்கி வரும் 4 சதவீத அகவிலைப்படி உயா்வை மாநில அரசு ஊழியா்களுக்கு தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராக்கிமுத்து தலைமையில் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் ரமேஷ் வரவேற்றாா். மாநிலச் செயலாளா் குபேரன் கூட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் விஜய மனோகரன், பொருளாளா் சுமதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்திட வேண்டும். மத்திய அரசு கடந்த ஜூலை 1 முதல் வழங்கி வரும் 4 சதவீத அகவிலைப்படி உயா்வு, கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சரண்டா் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

அரசுத் துறையில் அவுட்சோா்சிங் நியமனம் சமூக நீதிக்கு எதிரானது. எனவே மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை அழித்துவிடும் அரசாணை எண் 152ஐ ரத்து செய்ய வேண்டும்.

சேலத்தில் வரும் 17ஆம் நடைபெறவுள்ள மாநில பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT