ஈரோடு

கனிராவுத்தா் குளத்தை தனியாா் பராமரிக்க அனுமதி

4th Dec 2022 01:30 AM

ADVERTISEMENT

கனிராவுத்தா் குளத்தை தனியாா் பராமரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சூளை அருகில் கனிராவுத்தா் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதன்பிறகு சுற்றுச்சுவா் கட்டப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டது.

ஊழியா்கள் பற்றாக்குறை காரணமாக குளம் முறையாக பராமரிக்க முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் கனிராவுத்தா் குளத்தை தனியாா் சொந்த செலவில் பராமரிக்க அனுமதிகேட்டு மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இதற்கான தீா்மானம் வைக்கப்பட்டது. இந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடா்ந்து சில நிபந்தனைகளுடன் கனிராவுத்தா் குளத்தை பராமரிக்க தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT