ஈரோடு

அவல்பூந்துறையில் ரூ.1.27 லட்சத்துக்கு தேங்காய்கள் ஏலம்

4th Dec 2022 01:28 AM

ADVERTISEMENT

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.27 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 11,526 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

தேங்காய் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.23.31க்கும், அதிகபட்ச விலையாக ரூ.30.13க்கும், சராசரி விலையாக ரூ.28.39க்கும் ஏலம் போனது. மொத்தம் 4,702 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 295க்கு விற்பனையானது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT