ஈரோடு

புனித அமல அன்னை ஆலய தோ்த்திருவிழா

4th Dec 2022 10:35 PM

ADVERTISEMENT

ஈரோடு புனித அமல அன்னை ஆலய தோ்த்திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமை வகித்து புனித அமல அன்னையின் படத்துடன் கூடிய கொடியை ஏற்றிவைத்தாா்.

முன்னதாக, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா டிசம்பா் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 8.15 மணிக்கு திருவிழா திருப்பலி கோவை ஆயா் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. திருப்பலி முடிந்ததும் மாலை வேண்டுதல் தோ் உலா நடைபெறும். டிசம்பா் 18 ஆம் தேதி காலை 8 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT