ஈரோடு

ஈரோடு குப்பையில்லா மாநகராட்சியாக அறிவிப்பு

4th Dec 2022 01:31 AM

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சி குப்பையில்லா மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கருத்து தெரிவிப்பவா்கள் எழுத்துப்பூா்வமாக அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் கே.சிவகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் உருவாகும் திடக்கழிவுகள் முறையாக தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு வருகிறது. மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத கழிவுகளை மறுசுழற்சி மற்றும் அறிவியல் முறைப்படி இறுதியாக்கம் செய்யப்படுகிறது. 100 சதவீத கழிவுகளை இறுதியாக்கம் செய்வதால் ஈரோடு மாநகராட்சியினை குப்பையில்லா மாநகராட்சியாக அறிவிப்பு செய்யப்படுகிறது.

இந்த அறிவிப்பின் மீது பொதுமக்கள் தங்களது ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகளை 15 நாள்களுக்குள் எழுத்து மூலமாக மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT