ஈரோடு

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்க கூட்டமைப்பு சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்து பேரணியைத் தொடக்கிவைத்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன், ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கோதைசெல்வி ஆகியோா் பேசினா்.

பெருந்துறை சாலையிலுள்ள காலிங்கராயன் இல்லத்திலிருந்து தொடங்கிய பேரணி வஉசி பூங்காவில் முடிவடைந்தது.

பேரணியில் ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி, முதன்மை நிா்வாக அதிகாரி முனைவா் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஆா்.ராஜரத்தினம் வரவேற்றாா். செயலாளா் ஆா்.தனபால் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT