ஈரோடு

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ஈரோட்டில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சாா்பில் உலக எய்ட்ஸ் தினவிழா மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்தது.

ஹெச்ஐவி எய்ட்ஸ் உடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டு வருவோம். ஹெச்ஐவி எய்ட்ஸ் மற்றும் கரோனா பெருந் தொற்றுக்கு முடிவு கட்டுவோம் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் தொடக்கிவைத்தாா். ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி காலிங்கராயன் இல்லத்தில் முடிவடைந்தது.

பின் ஹெச்ஐவி எய்ட்ஸ், காசநோய், தன்னாா்வ ரத்ததானம் ஆகிய தலைப்புகளில் சுவரொட்டி தயாரித்தல் போட்டியில்

வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.

பயிற்சி உதவி ஆட்சியா் என்.பொன்மணி, சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் சோமசுந்தரம், ரவீந்திரன், கனகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT